(Exclusive) Vivo T2 சீரிஸின் ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் கேமரா விவரங்கள் அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டது

Highlights

  • Vivo T2 சீரிஸ் போன்கள் Flipkart இல் பிரத்தியேகமாக கிடைக்கும்.
  • Vivo T2x விவோவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனாக இருக்கும்.
  • Vivo T2 போன் AMOLED டிஸ்ப்ளே மற்றும் OIS ஆதரவுடன் 64MP கேமராவைக் கொண்டிருக்கும்.

Vivo இந்தியாவில் Vivo T2 மற்றும் Vivo T2x போன்களைஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது என்று சில நாட்களுக்கு முன்பு, பிரைஸ்பாபாவின் அறிக்கை தெரிவித்தது. இந்த இரண்டு சாதனங்களும் ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கை வெளிப்படுத்தியது. எப்போது வெளியாகும் என்பதைத் தவிர, வரவிருக்கும் இந்த இரண்டு சாதனங்களின் விலையும் ரூ. 20,000 க்குள் இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இப்போது கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் Vivo T2 சீரிஸ் மொபைல்களின் ரேம், ஸ்டோரேஜ் மாறுபாடுகள் மற்றும் கேமரா விவரங்கள் பற்றிய பிரத்யேகத் தகவலை, அறிமுகத்திற்கு முன்னதாக வெளியாகி இருக்கிறது.

 

வரவிருக்கும் Vivo T2 தொடர் சாதனங்களான Vivo T2 மற்றும் Vivo T2x ஆகிய மொபைல்கள்  Flipkart தளத்தில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும். Vivo T2 ஆனது 1300 nits பிரகாசத்துடன் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் . மேலும், இந்த ஸ்மார்ட்போன் OIS ஆதரவுடன் 64MP கேமராவைக் கொண்டிருக்கும். Vivo T2 மற்றும் T2x இரண்டும் 5G ஆதரவையும் வலுவான செயல்திறனையும் வழங்கும். Vivo T2x விவோவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனாக இருக்கும்.

Vivo T2 மொபைலானது இரண்டு ரேம் வகைகளில் வரும். அடிப்படை மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வரும். மற்றொரு வேரியண்ட்  8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மறுபுறம் Vivo T2x மூன்று ரேம் மற்றும் சேமிப்பக வேரியண்ட்களில் கிடைக்கும். Vivo T2x பேசிக் மாடல் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். மற்ற இரண்டு வகைகளில் 6GB/8GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் பேக் செய்யப்படும்.

 

Vivo T2 5G ஸ்மார்ட்போன் பிப்ரவரியில் Google Play Console இல் தோன்றியது நினைவிருக்கும். இந்த வரவிருக்கும் இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படும் என்று கூகிள் பிளே கன்சோல் வெளிப்படுத்தியது. மேலும், இந்த மொபைல் முழு HD+ தெளிவுத்திறன் மற்றும் வாட்டர் ட்ராப் வடிவ நாட்ச் கொண்டிருக்கும் என்று பட்டியல் வெளிப்படுத்தியது. மென்பொருளைப் பொறுத்தவரை, இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போன் கூகிள் பிளே கன்சோல் பட்டியலின் படி ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தில் இயங்கும்.

 

இந்த மாத தொடக்கத்தில், iQOO Z7i உடன் விவோ T2x ஆனது Google Play கன்சோலில் காணப்பட்டது. பட்டியலின் படி, T2x மொபைலின் குளோபல் வேரியண்ட் Dimensity 700 SoC மூலம் இயக்கப்படும். மேலும், இந்த வரவிருக்கும் மொபைல் முழு HD+ தெளிவுத்திறன், 440 PPI பிக்சல் அடர்த்தி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. Vivo T2 ஐப் போலவே, Vivo T2x ஆனது ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.