ரூ. 296 ரீசார்ஜ் திட்டம். ஏர்டெல் Vs ஜியோ Vs வோடபோன்.

Highlights

  • Vodafone Idea (Vi) இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக ரூ.296 மதிப்பிலான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • ரூ.296 திட்டமானது 25ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது

இந்த திட்டம் ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோவின் (Jio) ரூ.296 திட்டத்துடன் மிக நெருக்கமாக இயங்குகிறது. ஆனால், இதில் எது சிறந்தது?வாருங்கள் பார்க்கலாம். Vi அறிமுகம் செய்துள்ள இந்த கம்மி விலை திட்டமானது 30 நாட்கள் ரவுண்ட்-ஆஃப் வேலிடிட்டி உடன் வருகிறது. இது மொத்த டேட்டாவுடன் குறுகிய கால திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கான ஒரு திட்டமாகும். Vi நிறுவனம், அதன் ப்ரீபெய்ட் திட்டங்களைக் கடந்த காலத்தில் ஏர்டெல் போலவே வடிவமைத்துள்ளது. உண்மையில், தற்போது Vi இன் பல திட்டங்கள் ஏர்டெல்லின் திட்டங்களைப் போலவே இருக்கின்றன

 

வோடபோன் ஐடியா ரூ.296 திட்டம்

சில Vi திட்டங்கள் ஏர்டெல்லை விட கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. சரி, எப்படியிருந்தாலும், Vi இன் புதிய ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். வோடபோன் ஐடியா ரூ.296 திட்டமானது 25ஜிபி மொத்த டேட்டாவுடன் வருகிறது. இந்தத் திட்டம் மொத்தம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. இது அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டமானது தினமும் 100 SMS நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் Vi Hero அன்லிமிடெட் நன்மைகளை வழங்காது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் இணைந்த கூடுதல் நன்மை Vi Movies & TV ஆகும். இந்த விலையில் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம்!

 

ஏர்டெல் ரூ 296 திட்டம்

பார்தி ஏர்டெல் அதன் ரூ.296 திட்டத்தை 25 ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது. இந்த திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை மற்றும் 100 SMS நன்மைகள் உள்ளது. ஆனால், இந்த திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கூடுதல் நன்மைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்துடன் Apollo 24|7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music இலவசம் கிடைக்கிறது.

 

ரிலையன்ஸ் ஜியோ ரூ 296 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.296 திட்டமானது தினசரி 25 ஜிபி டேட்டா, தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை ஆகியவற்றை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டத்தில், பயனர்களுக்கு JioTV, JioCinema, JioCloud மற்றும் JioSecurity போன்றவை கூடுதல் நன்மைகளாக கிடைக்கின்றது.

 

ஏர்டெல் vs விஐ vs ஜியோ:

எந்த ரூ.296 திட்டம் சிறந்த பலனை வழங்குகிறது? ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ இன் அனைத்து ரூ.296 திட்டங்களும் ஒரே மாதிரியானவையாக இருக்கிறது. பயனர்கள் பார்க்கும் ஒரே வித்தியாசம் கூடுதல் நன்மைகள் மட்டுமே. அதேபோல நெட்வொர்க் அனுபவத்திலும் சில வேறுபாடுகள் இருக்கிறது. இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், Vi இன் ரூ.296 திட்டம் ஒரு கூடுதல் நன்மையுடன் மட்டுமே வருகிறது. அதே நேரத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ திட்டங்கள் ஒவ்வொன்றும் நான்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன.