50MP கேமரா, 6000mAh பேட்டரி, 5nm Exynos 1330 சிப்செட்டுடன் வெளியானது Samsung Galaxy M14 5G

Highlights

  • 50MP முதன்மை கேமரா உட்பட் மூன்று பின்பக்க கேமராக்கள், 13MP செல்ஃபி கேமரா இதில் உள்ளன.
  • இந்த Galaxy M14 5G மொபைல் 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
  • இந்த மொபைலில் 13 5G பேண்ட்கள் உள்ளன.

 

Samsung நிறுவனத்தின் M Series மொபைல்களின் புது வரவாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது Galaxy M14 5G. இது பட்ஜெட்விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் இதில் மிகச்சிறந்த அம்சங்களும், வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 50MP முதன்மை கேமரா உட்பட மூன்று பின்பக்க கேமராக்களைக் கொண்டுள்ளது. அதே போல் இந்த விலைப்பிரிவில் முதன்முறையாக 6000mAh பேட்டரியை வழங்கி இருக்கிறது சாம்சங். அதே போல பட்ஜெட் விலைப்பிரிவில் முதன் முறையாக 5nm ஃபேப்ரிகேஷனில் உருவான Exynos 1330 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக இந்த 5G சிப்செட் பதிமூன்று (13) 5ஜி பேண்ட்களைக் (band)  கொண்டுள்ளது. இந்த மொபைலின் மற்ற அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

 

டிஸ்ப்ளே

இந்த மொபைல் 90Hz ரிஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.58 அங்குல PLS LCD Full HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 2408 x 1080 பிக்சல் அடர்த்தியையும் கொண்டுள்ளது. 166.8mm x 77.2mm x 9.4mm அளவில் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.

கேமரா

இந்த Samsung Galaxy M14 5G மொபைலில் f/1.8 அப்பசருடன் கூடிய 50MP முதன்மை கேமரா உள்ளது. இதோடு 2MP டெப்த் சென்சாரும், 2MP மேக்ரோ லென்ஸூம் உள்ளன. அதுவே முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு  13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது வாட்டர் ட்ராப் நாட்சின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது.

 

சிப்செட்

இந்த கேலக்ஸி M14 5G மொபைலில் சாம்சங்கின் Exynos 1330 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது இந்த விலைப்பிரிவில் முதன்முறையாக வழங்கப்படுகிறது. இது ஒரு 5G  சிப்செட் ஆகும். இது பதிமூன்று 5ஜி பேண்ட்கள் வரை சப்போர்ட் செய்கிறது. அதாவது இந்தியாவில் உள்ள எல்லா 5ஜி  நெட்வொர்க்கும் இந்த மொபைலில் வேலை செய்யும். ஆக்டா கோர் ப்ராசஸரான இதில் Mali G68 GPU இருக்கிறது.

 

மெமரி

இந்த மொபைல் 4ஜிபி மற்றும் 6GB RAM என இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. இரண்டு வேரியண்டிலும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள micro SD கார்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி மொபைல் ஆண்ட்ராய்டு 13 மேல் சாம்சங்கின் One UI 5 ஸ்கின் மூலம் கட்டமைக்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. இது ஒரு லேட்டஸ்ட் இயங்குதளம் ஆகும். இது தவிர இந்த மொபைலுக்கு இரண்டு வருடத்திற்கான OS அப்டேட்டும், 4 வருடத்திற்கான  செக்யூரிட்டி அப்டேட்டும் கிடைக்கும் என சாம்சங் உத்திரவாதம் வழங்கி இருக்கிறது.

 

பேட்டரி

இந்த Galaxy M14 5G மொபைலில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த விலைப்பிரிவில் 6000mAh பேட்டரி வழங்குவது இதுவே முதல் முறை ஆகும். இதற்கென இதில் Type C போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென சார்ஜரை தனியாகத் தான் வாங்க வேண்டி இருக்கும்.

கனெக்டிவிட்டி

கேலக்ஸி எம் 14 5ஜி மொபைலில் Wi-Fi, Bluetooth 5.2, NFC மற்றும் GPS போன்ற கனெடிவிட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மொபைல் ப்ளூ, டார்க் ப்ளூ, சில்வர் என மூன்று நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

 

விலை

இன்று வெளியான இந்த Galaxy M14 5G மொபைல் ஏப்ரல் 21 முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை சாம்சங் மற்றும் அமேசான் இணையதளங்களிலும், சில்லரை விற்பனை கடைகளிலும் வாங்க முடியும்.

6GB RAM + 128GB ROM = ரூ. 13,490

8GB RAM + 128GB ROM = ரூ. 14,990