6,000mAh பேட்டரி, 90Hz டிஸ்ப்ளே, 50MP கேமராவோடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Samsung Galaxy F14 5G.

Highlights

  • Samsung Galaxy F14 5G என்பது இந்தியாவில் சமீபத்திய F-சீரிஸ் ஃபோன் ஆகும், மேலும் இது Galaxy F13 போனின் வாரிசாகும்
  • 50MP கேமரா, ஆண்ட்ராய்டு 13 OS, 6.6 அங்குல FHD+ டிஸ்ப்ளே மற்றும் 13MP கேமராவுடன் வெளியாகி இருக்கிறது.
  • Samsung Galaxy F14 5G மொபைலின் அறிமுக விலை ரூ.12,990.

 

Samsung Galaxy F14 5G மொபைல் வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இதன் விலை, விற்பனை தேதி மற்றும் இதன் முழுமையான அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போன் தற்போதைய கேலக்ஸி F13 மொபைலின் வாரிசாக வந்துள்ளது. புதிய கேலக்ஸி எஃப்-சீரிஸ் ஃபோன் பெரிய 6000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. முன்பு வெளியான F13 மொபைலில் இருந்த 15Wக்கு பதிலாக 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைப் பெறுகிறது. மொபைலின் பின்புறத்தில் பெரிய f/1.8 அப்பசருடன் கூடிய 50MP முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது குறைந்த வெளிச்ச நிலையிலும் நல்ல படங்களை எடுக்கும் திறனைக் கொண்டிருக்கும். புதிய சாம்சங் எஃப்-சீரிஸ் ஃபோன் சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 OS இல் இயங்குகிறது மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய பெரிய 6.6 அங்குல டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

 

Samsung Galaxy F14 5G விலை, விற்பனை தேதி

இந்தியாவில் Samsung Galaxy F14 5G மொபைலின் இரண்டு வேரியண்ட்கள் வெளியாகி உள்ளன.

4GB ரேம் + 128GB சேமிப்புத்திறன் = ரூ.12,990

6GB ரேம் + 128GB சேமிப்புத்திறன் = ரூ.14,990.

இவை அறிமுக விலைகள் என்பதை நினைவில் கொள்ளவும். அதாவது சாம்சங் இந்த விலையை சில நாட்களில் மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த போனின் விற்பனை இந்திய நேரப்படி, மார்ச் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளம் வழியாக தொடங்கும் .

மெமரி

Samsung Galaxy F14 ஆனது 4GB/6GB ரேம் மற்றும் 128GB சேமிப்புத்திறனுடன் பகத்துடன் இணைக்கப்பட்ட இன்-ஹவுஸ் Exynos 1330 SoC மூலம் இயக்கப்படுகிறது. இதன் சேமிப்புத்திறனை  மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக மேலும் விரிவாக்க முடியும். சிறந்த மல்டி-டாஸ்கிங் திறனுக்கு 6ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய ரேம் ஆதரவு உள்ளது. 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth மற்றும் USB Type-C போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவையும் கொண்டுள்ளது இந்த Samsung Galaxy F14 5G மொபைல்.

 

சிறப்பம்சங்கள்

இந்த மொபைலானது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OneUI ஸ்கின்னைக் கொண்ட இயங்குதளத்தில் இயங்குகிறது. தெளிவான குரல் அழைப்புகளுக்கான AI வாய்ஸ் பூஸ்ட், கஸ்டமைஸ்டு கால் பேக்கிரவுண்ட், ஸ்டேக் செய்யப்பட்ட விட்ஜெட்டுகள், மல்டி டாஸ்கிங் செய்வதற்கு வசதியாக ஸ்ப்ளிட் வ்யூ, தொலைபேசிகளுக்கு இடையே விரைவான ஷேரிங், ப்ரைவசி மற்றும் செக்யூரிட்டி டேஷ்போர்டு மற்றும் பல சுவாரஸ்யமான அம்சங்களோடு இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது.

பேட்டரி

Samsung Galaxy F14 5G ஆனது 6.6 அங்குல  FHD+ IPS LCD டிஸ்ப்ளே, 90Hz ரிஃப்ரெஷ் ரேட், செல்ஃபி ஷூட்டருக்காக ஒரு வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 லேயர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மொபைலின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று, இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

கேமரா

கேமராக்களைப் பொறுத்தவரை, Samsung Galaxy F14 5G ஆனது பின்புறத்தில் f/1.8 அப்பச்சர் கொண்ட 50MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் என மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது. கூடவே LED ஃபிளாஷ்  ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 13MP ஸ்னாப்பர் உள்ளது.

 

Samsung Galaxy F14 முக்கிய அம்சங்கள்

டிஸ்ப்ளே – 6.6 அங்குல FHD+ IPS LCD டிஸ்ப்ளே

ரிஃப்ரெஷ் ரேட் – 90Hz புதுப்பிப்பு வீதம்

சிப்செட் – Exynos 1330 SoC

பின்பக்க கேமரா – 50MP + 2MP + 2MP டிரிபிள் கேமராக்கள்

முன்பக்க கேமரா – 13எம்பி செல்ஃபி ஷூட்டர்

பேட்டரி – 6000mAh

சார்ஜிங் – 25W ஃபாஸ்ட் சார்ஜிங்