Oppo Reno 11F 5G மொபைலின் முழு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. விரைவில் வெளியாகலாம்.

Highlights

  • Oppo Reno 11F 5G விரைவில் இந்தோனேசியாவில் வெளியாகலாம்.
  • இதில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இதில் Dimensity 7050 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கலாம்.

Reno 11 சீரிஸ் இந்தியா உட்பட பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் Reno 11 மற்றும் Reno 11 Pro போன்ற இரண்டு மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  இந்நிலையில், இப்போது பிராண்ட் புதிய மாடலான Oppo Reno 11F 5G ஐ முதலில் இந்தோனேசிய சந்தையில் கொண்டு வந்து இந்த சீரிஸை  விரிவுபடுத்த இருக்கிறது. இந்த மொபைல் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வருமென தகவல்கள் வெளியாகிறது. இதுபற்றிய விவரக்குறிப்புகளும் கசிந்து வருகின்றன. இந்த புதிய ஃபோனைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

Oppo Reno 11F 5G (கசிந்தது)

  • Oppo Reno 11F 5G தொடர்பான டிப்ஸ்டர் மூலம் சமூக ஊடக தளமான X இல் இந்த கசிவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
  • மொபைலின் படம் மற்றும் அதன் முழு விவரக்குறிப்பு விவரங்கள் பகிரப்பட்டிருப்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவில் காணலாம்.
  • வடிவமைப்பைப் பற்றி பேசுகையில், Oppo Reno 11F 5G ஸ்மார்ட்போன் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவை வழங்குகிறது. அதேசமயம் மூன்று கேமரா அமைப்பை பின் பேனலில் காணலாம்.
  • இது தவிர, இந்த மொபைல் பிங்க், பச்சை மற்றும் நீலம் போன்ற மூன்று வண்ண விருப்பங்களில் காணப்படுகிறது.

 

Oppo Reno 11F 5G இன் விவரக்குறிப்புகள் (கசிந்தது)

  • டிஸ்ப்ளே: கசிவின் படி, புதிய Oppo Reno 11F 5G போனில் 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் காணலாம். இது FHD+ தெளிவுத்திறன், 120Hz புதுப்பிப்பு வீதம், 2160Hz PWM டிம்மிங் மற்றும் 10-பிட் வண்ண ஆதரவுடன் வழங்கப்படலாம்.
  • சிப்செட்: சிறந்த செயல்திறனுக்காக, Reno 11F 5G ஆனது Mediatek Dimensity 7050 சிப்செட் கொண்டதாக கூறப்படுகிறது.
  • சேமிப்பகம்:  இந்த மொபைலில் 8 ஜிபி ரேம், 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் டேட்டாவைச் சேமிக்க 256 ஜிபி வரை உள் சேமிப்பிடத்தைப் பெறலாம்.
  • கேமரா: Oppo Reno 11F 5G ஃபோனில் LED ஃபிளாஷ் கொண்ட மூன்று பின்புற கேமரா உள்ளது. இது Omnivision OV64B முதன்மை கேமரா, 8-மெகாபிக்சல் Sony IMX355 அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் Omnivision OV02B10 மேக்ரோ கேமரா ஆகியவற்றைப் பெறலாம். அதே நேரத்தில், செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 32 மெகாபிக்சல் Sony IMX615 செல்ஃபி கேமராவை ஃபோனில் கொண்டிருக்கலாம்.
  • பேட்டரி: பேட்டரியைப் பொறுத்தவரை, Oppo Reno 11F 5G ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் கூடிய பெரிய 5,000mAh பேட்டரியுடன் வழங்கப்படலாம்.
  • OS: இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 இல் வேலை செய்யும்.
  • மற்றவை: IP65 ரேட்டிங், டூயல் சிம் 5G, டிஸ்பிளே கைரேகை சென்சார், ப்ளூடூத், வைஃபை போன்ற பல அம்சங்களை மொபைலில் காணலாம்.