இன்று இரவு அறிமுகமாகிறது ஒப்போவின் முதல் மடிக்கக்கூடிய போன்!

Highlights

  • இந்தியாவில் ஃபோல்டபிள் போனை (Foldable Phone) அறிமுகம் செய்யும் 3-வது நிறுவனம் என்கிற பெருமை ஒப்போவிற்கு சொந்தமாகிறது.
  • முன்னதாக சாம்சங் (Samsung) மற்றும் மோட்டோரோலா (Motorola) நிறுவனங்கள் மட்டுமே இந்திய சந்தையில் ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

அந்த பட்டியலில், இன்று (பிப்.15) இரவு 8 மணிக்கு ஒப்போ நிறுவனமும் சேர்கிறது. ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? அதன் விலை நிர்ணயம் என்ன?அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இது சாம்சங்கின் லேட்டஸ்ட் ஃபிளிப் போனை தூக்கி சாப்பிடுமா?

OPPO வின் முதல் ஃபிளிப் போன்!

Oppo Find N2 Flip இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் உலகளாவிய நிகழ்வின் போது ஒப்போ நிறுவனம், அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒப்போவின் இந்த முதல் ஃபிளிப் போன் சாம்சங் மற்றும் மோட்டோரோலாவின் ஃபிளிப் போன்களுக்கு பெரிய தலைவலியாக இருக்க போகிறது. ஏனென்றால் ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் இந்திய விலை நிர்ணயமானது லேட்டஸ்ட் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் (Samsung Galaxy Z Flip) மற்றும் லேட்டஸ்ட் மோட்டோ ரேஸர் (Moto Razr) மாடல்களை விட குறைவாக இருக்கமெனத் தெரிகிறது.

 

Oppo Find N2 Flip விலை

ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் “சரியான” இந்திய விலை நிர்ணயம் இன்று இரவு நடக்கும் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வின் போது தான் அறிவிக்கப்படும் என்றாலும் கூட, இது ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இதன் இந்திய விலையை மிகவும் எளிதாக கணிக்க முடியும். சீனாவில் ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.71,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக எப்படி பார்த்தாலும், ஒப்போ நிறுவனம் இதன் இந்திய விலை ரூ.80,000 க்குள் தான் இருக்கும். அப்போது தான் ரூ.89,999 க்கு விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 4 மாடலுக்கு கடும் போட்டியை வழங்க முடியும். இந்த போட்டியில் மோட்டோ ரேஸர் 5ஜி போனிற்கு இடமே இல்லை. ஏனென்றால் அதன் விலை ரூ.1,24,999 ஆகும்!

Oppo Find N2 Flip  அம்சங்கள்

இது இரண்டு டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும்: 60Hz ரெஃப்ரெஷ் ரேட்; 720 x 382 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 3.26 அங்குல கவர் டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்; 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.8 அங்குல AMOLED டிஸ்பிளே. – 8ஜிபி ரேம் உடனாக மீடியாடெக் டைமன்சிட்டி 9000+ சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி வரை விரிவாக்கக்கூடிய விர்ச்சுவல் ரேம் அம்சமும் அணுக கிடைக்கும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை 256ஜிபி கிடைக்கும். – இது 44W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4,300mAh பேட்டரியுடன் வரும். கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 மாடலில் 3700எம்ஏஎச் பேட்டரி மட்டுமே உள்ளது.

 

கேமரா

கேமராக்களை பொறுத்தவரை, ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனில் மொத்தம் 3 கேமராக்கள் இருக்கும். 2 கேமராக்கள் பின்புறத்திலும், 1 கேமரா ஸ்மார்ட்போனின் இன்னர்-டிஸ்பிளேவிலும் இடம்பெறும். – டூயல் ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல் மெயின் கேமரா + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா இருக்கும். இன்னர்-டிஸ்பிளேவில் உள்ள செல்ஃபி கேமராவானது 32 மெகாபிக்சல் சென்சாரை பேக் செய்யும்.

 

நிறங்கள்

ஒப்போவின் இந்த புதிய ஃபிளிப் போன் ஆஸ்ட்ரல் பிளாக் மற்றும் மூன்லிட் பர்பில் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் பற்றிய முழு விவரத்தை நாளை பார்க்கலாம்.