சாம்சங்-க்கு போட்டியாக ப்ளிப் போனை வெளியிடும் ஒப்போ!

Highlights

  • ஒப்போ நிறுவனம் ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
  • இந்த புதிய போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான டிஸ்பிளே, தரமான சிப்செட் மற்றும் அட்டகாசமான கேமரா அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 

டிஸ்பிளே

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 6.8 அங்குல AMOLED ஃபோல்டிங் டிஸ்ப்ளே வசதி உள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 3.26 அங்குல அளவில் கவர் டிஸ்ப்ளே வசதி கூட உள்ளது. சாம்சங் பிளிப் போனை விட இந்த ஒப்போ பிளிப் போன் ஒரு தனித்துவமான அம்சங்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா

இந்த போனின் வெளிப்புற டிஸ்பிளேவின் அருகில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் காணப்படுகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல் ஆனது 32எம்பி செல்ஃபி கேமராவுடன் வெளிவரும். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

 

பாதுகாப்பு

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன், அதிநவீன லிக்விட் கூலிங் சிஸ்டம், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும்.

சிப்செட்

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. இதனோடு சக்திவாய்ந்த மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்தஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்டுத்த முடியும்.

 

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல்.  இந்த ஸ்மார்ட்போனின் எடை 191 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் ஸ்மார்ட்போன் சாண்டல்,  பிளாக் மற்றும் பர்பிள் நிறங்களில் வெளிவர இருக்கிறது. மேலும் இந்த போனின் வலது புறத்தில் வால்யூம் பட்டன்கள் வழங்கப்படுகின்றன.

பேட்டரி

4300 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் போன்.  இதை சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. ஆனால் இந்த பேட்டரிக்கு பதிலாக 5500 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

 

 

கனெக்டிவிட்டி

ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் விலை 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ஃபைண்ட் என்2 பிளிப் மாடல். அதேபோல் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.