நத்திங் (Nothing) நிறுவனம் தனது முதல் ஃபோல்டபிள் மொபைலின் ரெண்டரை வெளியிட்டது.

Highlights

  • நத்திங் தனது முதல் ஃபோல்டபிள் மொபைலை தயாரித்து வருகிறது
  • நிறுவனம் தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் மடிக்கக்கூடிய தொலைபேசியை உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்த மடிக்கக்கூடிய ஃபோன் ட்ரான்ஸ்பரண்டான பின் பேனலைப் பெறும்.

 

நத்திங் அதன் முதல் மடிக்கக்கூடிய மொபைலின் ரெண்டரை டீஸ் செய்துள்ளது. வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ரெண்டரை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. இந்த ரெண்டரில் இருந்து போனின் வடிவமைப்பு தெரியவந்துள்ளது. சுவாரஸ்யமாக, இந்த வடிவமைப்பு சாம்சங்கின் மடிக்கக்கூடிய தொலைபேசியைப் போன்று இருக்கிறது. எனவே இப்போது Samsung, Xiaomi, Oppo, Vivo மற்றும் Google ஐத் தொடர்ந்து, மடிக்கக்கூடிய பிரிவில் நத்திங் நிறுவனமும் நுழைந்துள்ளது என்று தெரிகிறது. ஆனால் அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அதன் ஸ்பெஷலான ட்ரான்ஸ்பரண்ட் வடிவமைப்பையும் வழங்க இருக்கிறது.

நத்திங் ஃபோல்ட்ஸ் (1) டிசைன்

நத்திங் ஃபோல்ட் (1) என்ற இந்த மடிக்கக்கூடிய போனின் ரெண்டர் வெளிவந்துள்ளது. நிறுவனம் தனது பதிவில் தனது சமூக உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்களுக்காக பிராண்ட் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளுடன் வருகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது. இந்த ரெண்டர்கள் நத்திங்கின் கம்யூனிட்டி உறுப்பினரிடம் இருந்தும் வந்துள்ளது.

வெளியான ரெண்டர்களில், இந்த மடிக்கக்கூடிய மொபைலின் வடிவமைப்பு சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டைப் போலவே உள்ளது, கீலில் பிராண்டிங் எதுவும் இல்லை. தொலைபேசியின் மடிக்கக்கூடிய திரை பிரகாசமாக உள்ளது மற்றும் அதன் கீல்கள் இடையே உள்ள இடைவெளி மடிக்கக்கூடிய திரையில் தெரியவில்லை. ஆனால் உண்மையான தொலைபேசியின் வடிவமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம்.

 

சிறப்பு அம்சங்கள் கிடைக்கலாம்

நத்திங் ஃபோனைப் போலவே (1), இந்த மடிக்கக்கூடிய ஃபோனும் ஒரு ட்ரான்ஸ்பெரண்ட் வடிவமைப்பைப் பெறலாம். இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மொபைல்களிலும் ட்ரான்ஸ்பெரண்ட் தோற்றத்தையே பயன்படுத்தி இருக்கிறது. மேலும் ஃபோல்டபிள் ஃபோன்கள் Glyph லைட்டிங்கைப் பயன்படுத்தலாம். இது அறிவிப்புகளின் போது ஒளிரும். மேலும் வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங், AMOLED மடிக்கக்கூடிய திரை, இரட்டை கேமரா போன்ற அம்சங்களையும் பெறலாம்.

நத்திங் ஃபால்ட் (1) எப்போது வெளியாகும்?

நத்திங் பிராண்ட் அதன் ட்விட்டர் பதிவு மூலம் நிறுவனத்தின் வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அதிக தகவல்களை வெளியிடவில்லை. நத்திங் ஃபோல்ட் (1) என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இந்த போன் சந்தைக்கு வரலாம் என ஊகிக்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் நத்திங் ஃபோன் (2) தயாரிப்பு வேலையில் இருக்கிறது