நோக்கியாவின் மலிவு விலை ப்ளிப் போன்!

இந்தியாவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் 5ஜி போன்களை கூட அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. இந்நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு நோக்கியா ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது. இந்நிலையில் புதிய நோக்கியா 2780 பிளிப் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

பிளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபிள் போன் கிடையாது. மாறாக நோக்கியாவின் பழைய பாணியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் இந்த போனை பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும்.

டிஸ்பிளே

இந்த புதிய நோக்கியா 2780 பிளிப் மாடல் ஆனது 2.7 அங்குல டிஎப்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் வெளிப்புறம்1.77 அங்குல ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

இந்த நோக்கியா பிளிப் போனில் 5 மெகா பிக்சல் கேமரா உள்ளது. இது பிக்சட் போகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

சிப்செட்

புதிய நோக்கியா 280 பிளிப் மாடலில் குவாட்-கோர் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த போனில் X5 எல்டிஇ மோடெம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 50Mbps டவுன்லோட் வேகத்திற்கான சப்போர்ட் வழங்குகிறது.

4ஜி

நோக்கியா 2780 பிளிப் மாடல் 4ஜி ஆதரவை வழங்குகிறது. எனவே சிக்னல் பிரச்சனை இன்றி இந்த போனில் பேச முடியும். மேலும் ரியல் டைம் டெக்ஸ்ட்டிங், வோல்ட்இ போன்ற ஆதரவையும் வழங்குகிறது இந்த புதிய நோக்கியா போன்.

ரேம்

4ஜிபி ரேம் மற்றும் 512எம்பி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா பிளிப் போன். இதோடு கைஒஎஸ் 3.1, எப்எம் ரேடியோ, எம்பி3 சப்போர்ட், எப்எம் ரேடியோ, வைஃபை போன்ற பல சிறப்பான அம்சங்களை வழங்குகிறது புதிய நோக்கியா 2780 பிளிப் மாடல்.

பேட்டரி

1450 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு இந்த நோக்கியா 2780 பிளிப் மாடல் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் சிகப்பு மற்றும் நீலம் என இரண்டு விதமான நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை

நோக்கியா 2780 பிளிப் மாடலின் விலை 90 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,457). அமெரிக்காவில் வரும் நவம்பர் 15 ஆம் தேதி இதன் விற்பனை தொடங்கும். கூடிய விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.