பெரிய கவர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது Motorola Razr 40 Ultra. கசிந்த படங்கள் மூலம் தெரியவந்தது.

Highlights

  • Motorola Razr 40 Ultra ஜூன் 1 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.
  • இது கஸ்டமைஸ் செய்துகொள்ளும் வகையிலான பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • இதன் கவர் டிஸ்ப்ளேவில் இரண்டு கேமராக்கள் உள்ளன

 

வரவிருக்கும் Motorola Razr + 2023, Motorola Razr 40 Ultra, ஃபிளிப் போன்கள் மிகப்பெரிய கவர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. இந்த மொபைல் ஜூன் 1 ஆம் தேதி உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிராண்டின் சீனப் பிரிவு ஏற்கனவே அதன் வருகையை டீஸ் செய்யத் தொடங்கியுள்ளது. சமீபத்திய கசிவில், புகழ்பெற்ற டிப்ஸ்டர் இவான் பிளாஸ் மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ராவின் புதிய ரெண்டர்களைப் பகிர்ந்துள்ளார். புதிய படங்கள் சாதனத்தின் அற்புதமான கவர் டிஸ்ப்ளேவின் சிறந்த தோற்றத்தைக் காட்டுகின்றன.

Blass வெளியிட்ட பல படங்கள் Razr 40 Ultra ஆனது அதன் கவர் திரையை பலவகையில் கஸ்டமைஸ் செய்துகொள்ளும் வசதியை வழங்கும் என்பதையும் காட்டுகிறது. இது கவர் திரையின் வடிவமைப்பு, எழுத்துருக்கள், எழுத்துரு அளவு, வண்ணங்கள், ஐகான் வடிவம், ஒலிகள், காட்சி அளவு மற்றும் தீம் ஆகியவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ள பயனர்களை அனுமதிக்கும்.

மொபைலில் சிவப்பு நிற கீல் பொருத்தப்பட்டிருப்பதை சில படங்கள் காட்டுகின்றன. மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா 3.5-இன்ச் கவர் டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதுதவிர, கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட இரட்டை கேமராக்கள் மற்றும் LED ஃபிளாஷ் ஆகியவை டிஸ்ப்ளேவின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன.

 

Motorola Razr 40 அல்ட்ரா (வதந்தி) விவரக்குறிப்புகள்

அறிக்கைகளின்படி, Motorola Razr 40 Ultra ஆனது 6.7-இன்ச் மடிக்கக்கூடிய OLED FHD+ பேனலுடன் 144Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்கும்.  இந்த மொபைலின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டதாகத் தெரிகிறது.

 

ரேஸ்ர் 40 அல்ட்ரா மொபைல், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் , 8 ஜிபி ரேம் உடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,640mAh பேட்டரியைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. இது My UX 5-அடிப்படையிலான Android 13 OS உடன் வெளியாகலாம். Razr 40 அல்ட்ரா பல்வேறு நாடுகளில் Samsung Galaxy Z Flip 5, Oppo Find N2 Flip மற்றும் Vivo X Flip ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.