Motorola Razr 40 Ultra (எ) Motorola Razr+ 2023 TDRA சான்றிதழைப் பெற்றது & மோனிகர் உறுதிப்படுத்தப்பட்டது

Highlights

  • மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தையில் அறிமுகமாக் இருக்கிறது.
  • இது சீனா & கனடா உள்ளிட்ட சில நாடுகளில் மோட்டோரோலா ரேஸ்ர்+ 2023 ஆக அறிமுகம் செய்யப்படும்.
  • பல சான்றிதழ் இணையதளங்களின் மூலம் இவற்றின் மோனிகர்கள் மற்றும் சில விவரக்குறிப்புகள்  உறுதியாகி உள்ளன.

 

மோட்டோரோலா தனது மோட்டோரோலா Razr+ 2023 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மொபைலை ஒரு நாட்டில் வெளியிடுவதற்குத் தேவையான சான்றிதழ்களை வாங்க ஆரம்பித்து இருப்பதைக் கொண்டு இந்த மொபைல் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி சமீபத்தில் சீன CQC சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டது. இது அதன் பேட்டரி திறன் மற்றும் வேகமான சார்ஜிங் திறனை வெளிப்படுத்தியது. இப்போது, ​​அதே மொபைல் TDRA சான்றிதழ் மற்றும் கனேடிய REL சான்றிதழ் வலைத்தளங்களில் காணப்பட்டது. இதன் மூலம் இந்த மொபைல் வெளியீட்டுக்கான அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கிறது.

மேலே உள்ள TDRA சான்றிதழிலும் REL சான்றிதழிலும் பார்த்தபடி, Motorola Razr+ 2023 மற்றும் Motorola Razr 40 Ultra ஆகிய இரண்டும் ஒரே மாதிரி எண்ணைக் கொண்டுள்ளன (Motorola XT2321-3 மற்றும் Motorola XT2321-1, எனவே அவை வெவ்வேறு பெயர்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். இப்படி ஒரே மொபைல் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நாடுகளில் வெளியாவது புதிதல்ல.  பல ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் பொதுவாக நடப்பதுதான்.

துரதிர்ஷ்டவசமாக, எந்தவொரு சான்றிதழ் பட்டியல்களும் இந்த மொபைல்களின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதற்கு முன்பு CQC லிஸ்டிங்கில் Motorola Razr+ 2023 (Motorola XT2321-2 மாடல் எண்ணுடன்) மொபைல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது.

இது தவிர, இந்த மொபைல் அதன் முந்தைய மாடலோடு ஒப்பிடும்போது சற்று அதிகமான பேட்டரி திறனைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது  3,640mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

மோட்டோரோலா ரேஸ்ர் 40 அல்ட்ரா மோனிகர் வெளிவருவது இதுவே முதல் முறை. மேலும் அதன் விவரக்குறிப்புகளைப் பற்றி குறைந்த தகவல்களே வெளியாகி உள்ளன. Motorola Razr+ 2023, சீனாவில் Q2, 2023 இன் போது வெளியிடப்படும் என வதந்தி பரவியுள்ளது. இதன்மூலம் Motorola Razr 40 Ultra பற்றிய அனைத்து விஷயங்களும் தானாகவே தெரிய வரும்.

மோட்டோரோலா ரேசர் 2023 முக்கிய விவரக்குறிப்புகள்

 

  • சிப்செட் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
  • ரேம் – 8 ஜிபி
  • திரை – 6.7 அங்குலம் (17.02 செமீ)
  • பின் கேமரா – 64MP + 13MP
  • செல்ஃபி கேமரா – 32 எம்.பி
  • பேட்டரி – 4000 mAh