Moto G Power 5G (2024) இன் முக்கிய விவரக்குறிப்புகள் கீக்பெஞ்ச் மூலம் வெளியானது.

Highlights

  • Moto G Power 5G 2024 ஆனது Dimensity 7020 சிப்செட்டுடன் வெளியாகும்.
  • இது 8GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 14 உடன் வெளியாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த மொபைல் 67W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகலாம்.

மோட்டோரோலாவின் புதிய மொபைலான Moto G Power 5G 2024 அறிமுகம் மிக விரைவில் இருக்கும். இந்த ஃபோன் முக்கிய விவரக்குறிப்புகளுடன் கீக்பெஞ்ச் என்ற தரப்படுத்தல் வலைத்தளத்தில் காணப்பட்டது. முன்னதாக, ஸ்மார்ட்போனின் உண்மையான தோற்ற ரெண்டர்கள் கசிந்தன. பட்டியலில் காணப்படும் மொபைலின் அம்சங்கள் எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை இப்போது பார்க்கலாம்.

Moto G Power 5G (2024) Geekbench பட்டியல்

  • வரவிருக்கும் மோட்டோரோலா ஃபோனின் Moto G Power 5G (2024) பெயர் Geekbench தரவுத்தள தளத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • Moto G Power 5G 2024 சிங்கிள்-கோர் டெஸ்டில் 679 புள்ளிகளையும், மல்டி-கோரில் 2005 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
  • ஆக்டா கோர் MediaTek சிப்செட்டில் இந்த மொபைல் வேலை செய்யும் என்பது தரவுத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்த ஆக்டா-கோர் சிப்பில் இரண்டு கோர்கள் 2.2GHz, ஆறு கோர்கள் 2.0GHz, மற்றும் PowerVR B-series BXM-8-256 GPU ஆகியவை அடங்கும்.
  • இந்த விவரத்தின் அடிப்படையில், இதில் MediaTek Dimensity 7020 சிப்செட்டை மொபைலில் நிறுவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மெமரியைப் பொறுத்தவரை, Moto G Power 5G (2024) மொபைலில் 8ஜிபி ரேம் இருக்குமெனக் கூறப்படுகிறது.
  • இது Android 14 இயங்குதளத்துடன் காணப்பட்டதை படத்தில் காணலாம்.

Moto G Power 5G (2024) Geekbench பட்டியல்

Moto G Power 5G (2024) இன் விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பு)

  • Moto G Power 5G (2024) மொபைலில் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவைக் காணலாம். செல்ஃபி கேமராவை வைப்பதற்கு நடுவில் பஞ்ச் ஹோல் கட்அவுட் டிசைனை கொடுக்கலாம்.
  • மோட்டோரோலா டிஸ்ப்ளேக்கு IPS LCD பேனலைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இது 1200 x 1600 பிக்சல்களின் HD தெளிவுத்திறனை ஆதரிக்கும்.
  • பேட்டரியைப் பொறுத்தவரை, புதிய மொபைலை 30W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகப்படுத்தலாம்.
  • ரெண்டரின் படி, மொபைலின் பரிமாணங்கள் 167.3 x 76.4 x 8.5 மிமீ என்று கூறப்படுகிறது.
  • ஆர்க்கிட் டின்ட் மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் என இரண்டு வண்ணங்களில் இந்த மொபைலை வெளியிடலாம் என்பதும் தெரியவந்துள்ளது.