ரெண்டர்கள் கசிந்தன: பெரிய கவர் திரையுடன் வருகிறதா Galaxy Z Flip 5?

Highlights

  • Galaxy Z Flip 5 மொபைலின் கவர் டிஸ்ப்ளேவை அதிகரிக்க இருக்கிறது
  • அதை கசிந்த சில ரெண்டர்கள் உறுதிப்படுத்துகின்றன.
  • இது முந்தைய மாடல்களை விட அதிக செயல்பாடுகளை வழங்கலாம்

 

சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் 4 ஒரு அற்புதமான மடிக்கக்கூடிய கிளாம்ஷெல். ஆனால் அதன் போட்டியாளர்களைப் போலல்லாமல், இந்த ஃப்ளிப் 4 ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட சில செயல்பாடுகளுடன், சிறிய வெளிப்புறத் திரையுடன் மட்டுமே வருகிறது. உங்களுக்குப் புதிதாய் வந்திருக்கும் நோட்டிஃபிகேஷன்கள், பேட்டரி சதவீதம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைப் பார்க்க மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். நிறைய வசதிகள் வழங்கப்பட வில்லை. இந்நிலையில், கொரிய நிறுவனமான சாம்சங் தனது Galaxy Z Flip 5 மொபைலின் கவர் டிஸ்ப்ளேவை அதிகரிக்கத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. சில கசிந்த ரெண்டர்கள் அதற்கான ஆதாரங்களைக் காட்டுகின்றன.

பெரிய டிஸ்ப்ளே

Sammobile ஆல் பகிரப்பட்ட வடிவமைப்பு ரெண்டர், சாம்சங் அதன் வரவிருக்கும் மடிக்கக்கூடிய கிளாம்ஷெல்லில் சில பெரிய மாற்றங்களைச் செய்யப் போகிறது என்பதை  படத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். Galaxy Z Flip 5 மொபைலின்  கவர் டிஸ்ப்ளே முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது சற்று பெரியதாகத் தெரிகிறது. முன்பக்க வெளிப்புற டிஸ்ப்ளே அதிக இடத்தை எடுத்துக்கொள்வதைக் காணலாம். மேலும் இது சமீபத்திய Find N2 Flip மொபைலில் Oppo வழங்குவதை விட நிச்சயமாக பெரியது.

 

கூடுதல் வசதிகள்

சாம்சங் இந்த பெரிய கவர் டிஸ்ப்ளேவை எவ்வாறு பயன்படுத்தப் போகிறது, என்னென்ன அம்சங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தபோதும், அதன் முந்தைய மாடல்களை விட இது அதிக செயல்பாடுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். முழு அளவிலான ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை வெளிப்புற டிஸ்ப்ளேவில் பயன்படுத்த பிராண்ட் அனுமதிக்கலாம், குறிப்பாக பல மூன்றாம் தரப்பு டெவலப்பர்கள் ஏற்கனவே அவ்வாறு செய்து வருவதால். இதில் டைமர்கள், கேமரா மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான ஆதரவும் இருக்கலாம்.

அளவு

கவர் டிஸ்ப்ளேவின் சரியான அளவுகள் வெளியிடப்படவில்லை என்றாலும், Sammobileக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, இந்த டிஸ்ப்ளே 3 முதல் 4 அங்குலம் இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்தபோதிலும், Galaxy Z Flip 4 இன் அளவீடுகளின் அடிப்படையில் பார்த்தால். இந்த டிஸ்ப்ளே விளிம்புக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.