இந்தியாவில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் iQOO Z7 Pro 5G விலை & அம்சங்கள் கசிந்தன

 

iQOO Z7 Pro 5G போன் இந்திய அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. சமீபத்தில், iQOO இந்தியாவின் அதிகாரி நிபுன் மரியா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போனை டீஸ் செய்திருந்தார். இந்த மொபைலின் வெளியீட்டு தேதி இன்னும் நிறுவனத்தால் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சமீபத்திய கசிவில், iQoo Z7 Pro 5G இந்திய விலை மற்றும் விவரக்குறிப்புகள் சந்தைக்கு வருவதற்கு முன்பு வெளியாகி உள்ளன. இந்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 

இந்தியாவில் iQOO Z7 Pro 5G விலை (கசிந்தது)

டிப்ஸ்டர் பராஸ் குக்லானி iQoo Z7 Pro 5G போனின் விலையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த போனின் ஆரம்ப விலை ரூ.25,000 ஆக இருக்கும் மற்றும் டாப் வேரியண்டின் விலை ரூ.30,000 வரை செல்லும். கசிவின் படி, OnePlus Nord CE 3 மற்றும் Redmi Note 12 Pro 5G ஏற்கனவே இருக்கும் அதே விலை பிரிவில் iQOO Z7 Pro 5G அறிமுகப்படுத்தப்படும்.

 

iQOO Z7 Pro 5G விவரக்குறிப்புகள் (கசிந்தது)

  • 6.78″ 120Hz AMOLED டிஸ்ப்ளே
  • MediaTek Dimnsity 7200
  • 12GB ரேம் + 256GB சேமிப்புத்திறன்
  • 64MP பின்பக்க + 16MP முன்பக்க கேமரா
  • 66W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4,600mAh பேட்டரி

திரை : கசிவின் படி, IQoo Z7 Pro 5G போன் 6.78 இன்ச் FullHD+ டிஸ்ப்ளேவோடு வெளியிடப்படும். இந்தத் திரை AMOLED பேனலில் உருவாக்கப்படும் மற்றும் 120Hz புதுப்பிப்பு விகிதத்தில் வேலை செய்யும். வளைந்த பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே போனில் காணப்படும் என்று நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது.

சிப்செட்: iQOO Z7 Pro 5G ஆனது Android 13 அடிப்படையிலான FuntouchOS 13 இல் வெளியாகலாம். கசிவின் படி, MediaTek Dimensity 7200 octa-core சிப்செட்டை இந்த போனில் காணலாம்.

நினைவகம் : கசிவின் படி, புதிய iQOO போன் இந்தியாவில் இரண்டு ரேம் வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்படலாம். 8ஜிபி ரேம் அதன் அடிப்படை வேரியண்டிலும், 12ஜிபி டாப் வேரியண்டிலும் கொடுக்கப்படலாம். சேமிப்பகமாக, இந்த போனில் 128ஜிபி மெமரி மற்றும் 256ஜிபி மெமரி கொடுக்கலாம்.

கேமரா : புகைப்படம் எடுப்பதற்காக இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. 2-மெகாபிக்சல் இரண்டாம் நிலை லென்ஸை அதன் பின் பேனலில் 64-மெகாபிக்சல் முதன்மை சென்சாருடன் காணலாம். அதே நேரத்தில், முன் பேனலில் 16 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் கொடுக்கப்படலாம்.

பேட்டரி : பவர் பேக்கப்பிற்காக, iQOO Z7 Pro 5G ஸ்மார்ட்போனில் 4,600mAh பேட்டரியைக் கொடுக்கும் விஷயம் லீக்கில் தெரியவந்துள்ளது. 66W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் இந்த போனில் காணலாம்.