டைப்-சி போர்ட்டுடன் வருகிறது ஆப்பிள் ஐபோன் 15!

Highlights

  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுவதாக தகவல்.
  • புதிய ஐபோன் 15 சீரிசில் வழங்கப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள்கள் MFI சான்று பெற்றிருக்கும் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிசில் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒருவழியாக ஆண்ட்ராய்டு போன்றே யுஎஸ்பி டைப் சி கேபிள் கொண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியும். எனினும், இந்த விஷயத்திலும் ஆப்பிள் மிக எளிய வழிமுறையை பின்பற்றாது என்றே தெரிகிறது. இது குறித்து சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சார்ஜிங் இண்டர்பேஸ் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

MFI சான்று

மேலும் இது MFI சான்று பெற்ற டைப் சி கேபிள்களை பயன்படுத்தும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் ஐபோனில் MFI சான்று பெற்ற டைப் சி கேபிள் வழங்கப்படலாம். தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது அனைத்து ஐபோன்களிலும் லைட்னிங் போர்ட் பயன்படுத்தி வருகிறது. இதற்கும் MFI சான்று பெற்ற லைட்னிங் கேபிள்களை கொண்டே சார்ஜ் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இதன் காரணமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி டைப் சி கேபிள்களை கொண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியாது.

ஐபோன் 15 சிறப்பம்சங்கள்

நீண்ட கால காத்திருப்புக்கு பின் ஆப்பிள் ஒருவழியாக யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இது தவிர புதிய ஐபோன் 15 சீரிசில் புதிய சிப்செட், ஆப்பிள் ஏ17 பயோனிக் வழங்கப்பட இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் பெரிஸ்கோப் லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் சாலிட்-ஸ்டேட் பட்டன்கள், டைட்டானியம் பில்ட் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14 சீரிஸ் போன்றே, புதிய ஐபோன் 15 சீரிசிலும் ப்ரோ மாடல்களில் மட்டும் டைனமிக் ஐலேண்ட் வழங்கப்பட இருக்கிறது.

டிஸ்ப்ளே

இதுதவிர ஐபோன் 15 மாடலில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே, ஐபோன் 15 பிளஸ் மாடலில் 6.7 இன்ச், டாப் எண்ட் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் முறையே 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட உள்ளன. இதே போன்று மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் அல்ட்ரா பிரீமியம் ஐபோனை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார். ஐபோன் அல்ட்ரா அல்லது ஐபோன் 16 அல்ட்ரா பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய மாடலில் சிறப்பான கேமராக்கள், பெரிய டிஸ்ப்ளே மற்றும் போர்ட்லெஸ் டிசைன் வழங்கப்படலாம்.