ரூ.9,000க்கு ஒரு சிறந்த ஸ்மார்ட் டிவி


பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்காகவே இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த டிவியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஜூலை 18-ந் தேதி ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனம், தற்போது மலிவு விலையில் ஸ்மார்ட்டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனத்தின் இன்பினிக்ஸ் Y1 என்கிற 32 அங்குல ஸ்மார்ட் டிவி சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் விலையில் அதிக அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைப்பவர்களுக்கு இந்த டிவி பயனுள்ளதாக இருக்கும்.

இதில் யூடியூப், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனி லிவ், ஈராஸ் நவ், ஜீ5, போன்ற ஓடிடி ஆப்புகளும் இடம்பெற்று உள்ளன. மேலும் இது 20W டால்பி ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. 32 அங்குல LED திரை, Quadcore புராசஸர், 512MB RAM, 4 GB சேமிப்புத்திறன், லினக்ஸ் இயங்குதளம் என எண்ணற்ற அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்டிவிக்கு ஒருவருட வாரண்டியும் கிடைக்கிறது.

இந்த இன்பினிக்ஸ் Y1 ஸ்மார்ட்டிவியின் விலை ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த 32 அங்குல ஸ்மார்ட் டிவி வருகிற ஜூலை 18-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும். எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவீதம் உடனடி டிஸ்கவுண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.