Home News BIS தளத்தில் காணப்பட்டது Honor 90. இந்தியாவில் செப்டம்பர் 21 அன்று வெளியிடப்படலாம்.

BIS தளத்தில் காணப்பட்டது Honor 90. இந்தியாவில் செப்டம்பர் 21 அன்று வெளியிடப்படலாம்.

Highlights
  • ஹானர் 90 செப்டம்பர் 21 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 200MP முதன்மை பின்புற கேமராவை இதில் காணலாம்.
  • இந்த மொபைல் 66W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வரலாம்.

Honor 90 மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஹானர் அறிவித்துள்ளது. வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாக இது குறித்து கசிந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த புதிய மொபைல் இந்தியாவில் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த மொபைலானது இப்போது BIS சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. இந்த மொஐலின் அம்சங்கள் மற்றும் பிற சாத்தியமான விவரக்குறிப்புகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Honor 90 BIS பட்டியல்

Honor 90 வெளியீட்டு தேதி (கசிந்தது)

ஹானர் 90 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி சமூக ஊடக தளமான X இல் வெளிவந்துள்ளது. இந்த மொபைலின் நுழைவு செப்டம்பர் 21 அன்று இந்தியாவில் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் இக்கருவி அறிமுகம் குறித்து தகவல் அளித்துள்ளதை பதிவில் காணலாம். இது குறித்து முழுமையாக உறுதியாக தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், நிறுவனம் எந்த அறிவிப்பை வெளியிடுகிறது என்பதை மேலும் பார்க்க வேண்டும்.

 

ஹானர் 90 (சீனா) இன் விவரக்குறிப்புகள்

இந்த மொபைல் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதே விவரக்குறிப்புகளுடன் இது இந்தியாவிலும் கொண்டு வரப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.