தள்ளுபடி விலையில் ஆப்பிள் சாதனங்கள்!


ஆப்பிளின் சாதனங்களை வாங்க முடியாமல் இருப்பதற்கு அதன் விலை தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், இப்போது இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. காரணம்.. ஆப்பிள் ஐபோன்களுக்கு நம்ப முடியாத அளவு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

க்ரோமா எவ்ரிதிங் ஆப்பிள் சேல்

பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களில் ஒன்றான க்ரோமா, எவ்ரிதிங் ஆப்பிள் சேல் (Everything apple sale) அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது இந்தியாவில் ஜூலை 28 ஆம் தேதி தொடங்கி மாத இறுதி வரை நடந்து வருகிறது.

ஆப்பிள் சாதனங்களுக்கு தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் தளங்கள் தள்ளுபடிகளை அறிவித்து வந்தாலும், க்ரோமாவின் இந்த தள்ளுபடி என்பது சிறப்பானதாக இருக்கிறது.
தள்ளுபடியோ தள்ளுபடி!

ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப்கள் மற்றும் அக்ஸசரிஸ்களுக்கு என அனைத்திற்கும் க்ரோமா இணையதளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. அதிகபட்சமாக 67 சதவீத தள்ளுபடியுடன் இந்த சாதனங்களை க்ரோமா இணையதளத்தில் வாங்கலாம். கூடவே, நீங்கள் வாங்க விரும்பும் ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற சாதனங்களின் விலையை பிற ஆன்லைன் தளங்களின் விலையுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ஐபோன் 13

ஆப்பிள் ஐபோன் 13 இன் 128ஜிபி வேரியண்ட் மாடல் க்ரோமா இணையதளத்தில் பெரும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில் தற்போது க்ரோமா தளத்தில் ரூ.66,990க்கு வாங்கலாம். கூடுதலாக வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதேபோல் ஐபோன் 13 மாடல் ரூ.89,900 ஆக இருந்த நிலையில் தற்போது க்ரோமா தளத்தில் ரூ.75,990 என கிடைக்கிறது. இந்த ஐபோன் மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
ஆப்பிள் ஐபோன் 13 ஆனது 6.1 அங்குல அளவுடன் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டும் 12 மெகாபிக்சல் கேமராக்களாகும். முன்புறத்தில் ஒரு 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 13 ஆனது ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 3227 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12 மொபைலின் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.65,900 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது க்ரோமா தளத்தில் வங்கி சலுகை உட்பட தள்ளுபடியுடன் 53,990 ரூபாய்க்குக் கிடைக்கிறது. 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.70,900 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.58,990 ஆக குறைந்துள்ளது. இந்த மாடல் அக்டோபர் 2020 இல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஏ14 பயோனிக் சிப் ஆதரவு ஆப்பிள் ஐபோன் 12 ஆனது 6.1 அங்குல ரெடினா XDR டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. ஐபோன் 12 ஆனது ஏ14 பயோனிக் சிப் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 12 மெகாபிக்சல் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் என பின்புறத்தில் இரட்டை கேமராவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 4K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் இருக்கிறது.

ஐபோன் 11

முந்தைய இரண்டு மாடல்களுடன் ஒப்பிடுகையில் ஐபோன் 11 என்பது மிகப் பழைய மாடல். இந்த ஆப்பிள் ஐபோன் 11 மொபைலின் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரிண்ட் ரூ.49,990 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.42,990 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டானது ரூ.54,900 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.49,990 என கிடைக்கிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 GPS 41mm அளவு வேரியண்ட் ஆனது ரூ.41,900 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.37,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் செப்டம்பர் 2021 இல் அறிமுகமானது. இது முந்தைய தலைமுறை சாதனத்தை விட 70% வரை அதிக பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஆப்பிள் வாட்ச் SE

ஆப்பிள் வாட்ச் SE GPS 40 மிமீ வேரியண்ட் ஆனது ரூ.29,900 ஆக இருந்த நிலையில் தற்போது க்ரோமா தளத்தில் ரூ.26,990 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ச் மாடல் செப்டம்பர் 2020 இல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் S5 SiP மற்றும் W3 வயர்லெஸ் சிப் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

Apple Macbook Pro (2021)

Apple Macbook Pro (2021) 14 அங்குல மாடல் ரூ.1,94,900 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மேக்புக் ரூ.1,75,410 என்ற விலைக்கு க்ரோமா இணையதளத்தில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாட்ச் டிஸ்ப்ளே உடன் அறிமுகமான இந்த மாடல் p3 பிரைட்னஸ், HDR Support மற்றும் XDR வெளியீட்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.